கனி நிறைந்த வாழ்க்கை வாழ்வதற்காக ஒரு ஜெபம்

 

அன்பின் தேவனே. இந்த நல்ல ஜெபநேரத்திற்காக நன்றி கூறுகிறேன். இந்த நாளிலே நான் உம்முடைய ஆவியின் கனிகளினாலே நிறைவதற்கு விரும்பி வேண்டுதல் செய்கிறேன். ஆவியின் ஒன்பது கனிகளினாலே நிரம்பியிருக்க அதிகமாக ஆசைப்படுகிறேன். இன்று எனக்குள் வருகிற கனியற்ற தன்மைகள்,கோபசுபாவங்கள் என்னைக் குற்றப்படுத்துகிறது. என் குடும்பத்தாரிடத்திலே என் கோபத்தை வெளிப்படுத்துகிறேன். நான் பணி செய்கிற இடத்திலே அதிகமாக என் சுபாவத்தை வெளிப்படுத்துகிறேன். கனியில்லாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்று சொன்னபடி, என் வாழ்வும் வேதனையாய் முடியாதபடி எனக்கு இரங்கும் கர்த்தாவே, கனியில்லாத மரத்தைப் பார்த்து இயேசுகிறிஸ்து.இனி ஒருக்காலும் கனியிராது என்று சொன்னவுடனே அது பட்டுப்போனதுபோல, என் வாழ்வு சாபத்துக்குள்ளாகாதபடி என்னை நற்கனிகளினால் நிறைத்தருளும் கர்த்தாவே. நல்லகனி தர வேண்டும் என்று எங்களை நலமான இடத்திலே நிம்மதியாக வாசம்பண்ண வழி நடத்தின கர்த்தாவே, நாங்கள் நல்ல கனிகளைத் தந்து உம்முடையபாதுகாவலைப்பெற உதவி செய்யும். நல்ல கனி கொடாத நிலமை வராதபடி என் இருதயத்தை உம்முடைய பண்புகளினால் நிறைத்தருளும் கர்த்தாவே. நான் நல்ல கனிதராதபடி கெட்ட கனிகளைத் தரும்போது, நீர் இன்று எனக்கு/என் வீட்டாருக்குக் கொடுத்திருக்கிற பாதுகாவலின் வேலியை இழந்து விடுவேனோ என்கிற எண்ணம் எனக்குள்ளே என்னைக் குற்றப்படுத்துகிறது. நல்ல கனியில்லாத படியினால் சத்துருவை மிதிக்க வேண்டிய நான் ஆசீர்வாதத்தை இழந்து, சத்துருவால் ஆளுகை செய்கிற மக்களால் மிதிக்கப்படுகிறேனே என்று எண்ணும் போது, மிகுந்த துக்கப்படுகிறேன். இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். உம்முடைய அன்பு எனக்குள் பெருகவேண்டும். கல்வாரியில் எனக்காக இரத்தம் சிந்தி, ஆணிகளால் கடாவப்பட்டு வேதனையடைந்த அந்த அன்பின் செயலை உணர்ந்து. நான் இன்று முதல் நற்பண்புகளினால், கனிகளினால் நிறைய எனக்கு உதவி செய்யும். நான் மற்றவர்களுக்கு மத்தியிலே சாட்சியாக என் சொல்லினாலும், செயலினாலும் உம்மை வெளிப்படுத்த எனக்கு உதவி செய்யும். பழையவைகள் ஒழிந்து, எல்லாம் புதிதாகி கிறிஸ்துவுக்குள்ளான மகனாக/மகளாக மாற்றும். என்னைக் காண்கிறவர்கள் என்னில் உம்மைக் காண என் வாழ்க்கையை மாற்றும், நீர் அப்படிச் செய்வீர் என்று நம்பி உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறேன் பிதாவே, ஆமென்.