அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப வேளைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என் வாழ்வில் என் ஜெபத்தைக் கேட்டு நாள் விரும்பின காரியங்களைக் கற்றுக் கொள்ள எனக்கு உதவி செய்தீர். அதற்காக ஸ்தோத்திரம். இப்பொழுதும் கர்த்தாவே, இதுவரை பள்ளியில் படிப்பை படித்து முடிக்க உதவி செய்தபடியினால் உமக்கு ஸ்தோத்திரம், கர்த்தாவே, நான் எழுதிய தேர்வில் நீர் தந்த வெற்றிக்காக உமக்கு ஸ்தோத்திரம். கர்த்தாவே, என் வாழ்வில் நான் மருத்துவ படிப்பை/இன்ஜீனியரிங் படிப்பை/கம்யூட்டர் சம்பந்தமான படிப்பை காமர்ஸ் சம்பந்தமான படிப்பை. இன்னும் மருத்துவ ரீதியான படிப்பைப் படிக்க விரும்புகிறேன். நீர் எனக்கு எந்தக் கல்லூரியிலே, எந்த இடத்திலே படிப்பதற்குச் சித்தமாயிருக்கிறீரோ, அந்த இடத்திலே உள்ள கல்வி ஸ்தாபனத்தில் தங்கிப் படிக்க எனக்கு உதவி செய்யும். நீர் ஒருவரே நான் படிப்பதற்கு வேண்டிய இடத்தையும், அதற்கு வேண்டிய பீஸ் பணத்தையும் தருகிறவர் என்று உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். கர்த்தாவே, அந்த இடத்தின் சீதோஷ்ண நிலை என் சரீரத்திற்கு ஏற்றதாய் இருக்க உதவி செய்யும். அந்த இடத்திலே உம்மை ஆராதிப்பதற்குரிய நல்ல திருச்சபை இருக்க உதவி செய்யும். நான் சேர்ந்து படிக்கின்ற இடத்தில் ஆலயத்திற்குச் சென்று ஆராதிக்கத் தக்கதாக ஏற்ற நண்பர்களைத் தாரும். படிக்கப்போகிற காலத்திலே எந்தத் தடையும், எந்தச் சட்டமும், பாதிப்பும் வராதிருக்கக் காத்துக் கொள்ளும். என்னுடைய பெற்றோர் என்னைக் குறித்து வைத்திருக்கிற எதிர்பார்ப்பு களை நிறைவேற்றுகிற மகனாக/மகளாக என்னை மாற்றும். எந்த விதமான குறைவும், எனக்குள் தோன்றி விடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். நான் ஒரு சாட்சியுள்ள மகனாய்/மகளாய் இருக்க எனக்கு உதவி செய்யும். என்னுடைய காரியங்களைப் பார்க்கிற மக்கள். உம்முடைய கிருபையைப் பெற்றுக்கொள்ள தாகமுடையவர்களாய் மாற்றும். நான் எவைக ளிலும் தோல்வியும், துக்கமும் அடையாதபடி என்னைக் கண்மணிபோல் காத்தருளும், ஏற்றக் காலத்தில் இந்தப் படிப்பை முடித்து மேலான படிப்பைப் படிக்கவோ அல்லது வேலைக்கோ நான் செல்லத்தக்கதாக என் காரியங்களை ஜெயமாக்கும். உம்முடைய அன்பு, கிருபை, பராமரிப்பு, தயவுக்காக உமக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துகிறேன். தொடர்ந்து என்னைக் காத்து நடத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.